வெள்ளி, நவம்பர் 09, 2012

27 மாவட்டங்களில் ரூ.235 கோடி செலவில் 121 பாலங்கள் கட்டப்படும்


சென்னை, நவ.- 9 - தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ரூ.235 கோடி செலவில் பாலங்கள் கட்டமைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்கள். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-​ மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவைப்படும் பல்வேறு கட்டமைப்புகளில் சாலை உட்கட்டமைப்பு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை அங்கு அமைந்துள்ள ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பினைக் கொண்டே கணிக்க இயலும். சாலைப் போக்குவரத்து வசதி சிறப்பாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தால் தான் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும். வளர்ச்சித் திட்டங்கள் செயல் வடிவம் பெற சாலைப் போக்குவரத்து முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும், பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், 3,793 கோடி ரூபாய் மதிப்பில் புதிய சாலைகள் மற்றும் புதிய ரயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கும், ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் பாலங்களைப் பராமரிப்பதற்கும் கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு, 340.68 கோடி ரூபாய் மதிப்பில், சென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்களில் மேம்பாலங்கள், பாலங்கள், சுரங்க நடைபாதைகள், ஆகாய நடைபாதை ஆகியவற்றை அமைக்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், இந்த ஆண்டு ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக 2,262 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளார்கள். சாலை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் மிகவும் முக்கியமானது பாலங்கள் அமைப்பது ஆகும். ஆறு மற்றும் nullர்பரப்புகளை சுலபமாக கடந்து சீரான வாகனப் போக்குவரத்து ஏற்படுத்துவதற்கு அவற்றின் குறுக்கே பாலங்கள் அமைக்கப்படுவது மிகவும் இன்றியமையாததாகும். எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 121 பாலங்கள் அமைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 7 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 பாலங்களும், கடலூர் மாவட்டத்தில் 8 கோடியே 34 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4 பாலங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 10 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1 பாலமும், வேலூர் மாவட்டத்தில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 1 பாலமும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், சேலம் மாவட்டத்தில் 31 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 8 பாலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 5 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 பாலங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 8 கோடியே 67 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பாலங்களும், ஈரோடு மாவட்டத்தில் 5 கோடியே 67 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பாலங்களும், கரூர் மாவட்டத்தில் 15 கோடியே 95 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 3 பாலங்களும், திருப்nullர் மாவட்டத்தில் 7 கோடியே 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பாலங்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 9 கோடியே 34 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 4 பாலங்களும், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 14 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 6 பாலங்களும், அரியலூர் மாவட்டத்தில் 5 கோடியே 29 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 3 பாலங்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் 1 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 11 பாலங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 3 கோடியே 85 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் 3 பாலங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 கோடியே 54 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 7 பாலங்களும், திருவாரூர் மாவட்டத்தில் 3 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், மதுரை மாவட்டத்தில் 8 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் 19 கோடியே 72 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 20 பாலங்களும், தேனி மாவட்டத்தில் 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 பாலங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 12 கோடியே 58 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பாலங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 2 கோடியே 64 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், சிவகங்கை மாவட்டத்தில் 8 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 பாலங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 கோடியே 19 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பாலங்களும், விருதுநகர் மாவட்டத்தில் 5 கோடியே 64 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 3 பாலங்களும் என மொத்தம் 27 மாவட்டங்களில் ரூ.235 கோடி ரூபாய் செலவில் 121 பாலங்கள் கட்டப்படும். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு அடைந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் ஒன்றொடொன்று இணைக்கப்பட்டு, மக்கள் மற்றும் பொருட்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு சுலபமாகவும், விரைவாகவும், சென்றடைவதற்கு வழிவகை ஏற்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக