திங்கள், நவம்பர் 05, 2012

தீபாவளி : 6,859 சிறப்பு பஸ்கள்


தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 6,859 சிறப்பு பேருந்துகளை இயக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு மையங்களை அமைக்கவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமைச்சர் வி.செ.பாலாஜி வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து நவம்பர் 9ஆம் தேதி 768, 10ஆம் தேதி 633, 11ஆம் தேதி 543, 12ஆம் தேதி 884 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை நீங்கலாக, மாநிலம் முழுவதும் இருந்து 9ஆம் தேதி 925, 10ஆம் தேதி 940, 11ஆம் தேதி 977, 12ஆம் தேதி 1189 பேருந்துகள் என மொத்தம் 6,859 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பபட உள்ளன. தீபாவளிக்குப் பிறகு ஊர் திரும்ப வசதியாக 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.300 கி.மீ. தொலைவுக்கு மேல் செல்லும் சிறப்பு பேருந்துகளுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 16 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படவுள்ளன. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 5 முதல் 13ஆம் தேதி வரை சென்னையின் இதர பகுதிகளில் இருந்து தியாகராயநகர், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் குறித்து 044 - 24794709 என்ற எண்ணில் முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக