வெள்ளி, ஏப்ரல் 05, 2013

நைஜீரியா: பஸ் மற்றும் பெற்றோல் டேங்கர் மோதிக்கொண்ட விபத்தில் 35 பேர் பலி


ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் ஈடோ மாநில பெனின் - ஓர் நெடுஞ்சாலை உக்போகுயி என்னுமிடத்தில் சென்ற பஸ், லாரி, பெட்ரோல் டேங்கர் என மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன. அப்போது டேங்கர் லாரி வெடித்து சிதறியது. இதில் பஸ்சில் இருந்த பயணிகள் உள்பட குறைந்தது 36 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். 100-ற்க்கும் மேற்பட்டோர் இதில் சிக்கியுள்ளனர். ஆப்பிரிக்காவிலேயே அதிக அளவில் விபத்துகள் நைஜீரியாவில் நடக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் டேங்கர் விபத்துக்குள்ளானதில் 100-ற்க்கும் மேற்பட்டோர் இறந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த விபத்திற்கான காரணம் என்ன என்று விசாரணை நடக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக