வியாழன், ஏப்ரல் 11, 2013

'மிஹின் லங்கா தமிழகத்துக்கான சேவைகளை நிறுத்துகிறது


மிஹின் லங்கா எனும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தமிழகத்திற்கான சேவைகளை ஜூன் முதலாம் திகதியிலிருந்து நிறுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. கொழும்பிற்கும் திருச்சிக்குமிடையே வாரம் நான்கு முறை மிஹின் லங்கா விமானங்கள் வந்து போகின்றன. தமிழகத்தில் பிக்குமார் தாக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை குறைகிறது பயணிகள் போக்குவரத்து வீழ்ச்சியடைந்த நிலையிலேயே சேவைகளை நிறுத்த முடிவெடுக்கப்பட்டதாக மிஹின் லங்கா பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் ட்ரான்ஸ்லங்கா கூறுகிறது. கடந்த செப்டம்பரில் வேளாங்கண்ணி வந்த இலங்கையர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து பயணிகள் வருகை வீழ்ந்திருக்கிறது. ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கெதிரான தீர்மானம் தொடர்பாக தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்ததன் பின்னணியில் பயணிகள் எண்ணிக்கை இன்னமும் குறைந்திருக்கிறது. இதனால், பல்வேறு இலங்கை விமான நிறுவனங்களும் தங்கள் சேவைகளைக் குறைத்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து பத்து இந்திய நகரங்களுக்கு விமான சேவைகள் தற்போது உள்ளன என்றாலும் சென்னைக்கே மிக அதிக எண்ணிக்கையிலான சேவை நடக்கின்றது, இரண்டாம் இடத்தில் திருச்சி இருக்கிறது என்கின்றனர் நோக்கர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக