வியாழன், மே 30, 2013

10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியாகிறது


சென்னை : பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை 9.15 மணிக்கு வெளியாகிறது. இதையடுத்து மதிப்பெண் பட்டியல் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் ஏப்ரல் 12ம் தேதி வரை நடந்தது. 10 லட்சத்து 69 ஆயிரத்து 500 பேர் எழுதினர். தனி தேர்வர்களாக 70 ஆயிரத்து 233 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இன்று காலை 9.15 மணிக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்களின் தேர்வு பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். இதற்காக www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge3.tn.nic.in ஆகிய இணைய தளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. இந்த இணைய தளங்களில் ttp:// dge3.tn.nic.inஎன்ற இணைய தள முகவரிGPRS/ WAP வசதியுடன் கூடிய செல் போனிலும் தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அதில் தேர்வெண்ணுடன் பிறந்த தேதியும் டைப் செய்து பார்க்க வேண்டும். இதுதவிர அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவல் மையம், மாவட்ட கிளை நூலகங்கள் ஆகியவற்றில் கட்டணம் இல்லாமல் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவு களை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியல்கள் ஜூன் 20ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வழங்கப்படும். தனி தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் குறித்து மறுகூட்டல் செய்ய ஆன்லைன் முறை யில் விண்ணப்பித்து தெரிந்து கொள்ள முடியும். இதற்காக www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தை பயன்படுத்த வேண்டும். மறு கூட்டலுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். ஜூன் 7 முதல் 10ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும். Wishing you All the Best !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக