வியாழன், மே 30, 2013

சீனாவின் கடலோர அச்சுறுத்தலை முறியடிக்க இந்தியா-ஜப்பான் முக்கிய ஒப்பந்தம்


டோக்கியோ: 3 நாள் ஜப்பானில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இன்று தாய்லாந்து செல்கிறார். முன்னதாக, இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பாதுகாப்பு துறையில் இந்தியா - ஜப்பான் நாடுகள் இணைந்து செயல்படுவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக சீனாவின் கடலோர அச்சுறுத்தலை முறியடிக்க இந்தியா-ஜப்பான் நாடுகளுக்கு இடையே முக்கிய ஒப்பந்தம் செய்யப்பட்டது. விண்வெளித் தொழில்நுட்பம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் அரிய தாதுக்கள் பயன்பாடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இணைந்து செயல்பட இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சர்வதேச அளவிலான விவகாரங்களில் இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செயல்பட இருநாட்டு பிரதமர்களும் ஒப்புதல் தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் செயல்படுத்துள்ள அதிக வேக புல்லட் ரயில் திட்டத்திற்கு ஜப்பான் சம்மதம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக