அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்) எனது அன்பு சகோதர, சகோதரிகளே,நண்பர்களே மற்றும் நீடுர்-நெய்வாசல் வாசிகளே....

அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)
எனது அன்பு சகோதர, சகோதரிகளே,நண்பர்களே மற்றும் நீடுர்-நெய்வாசல் வாசிகளே....
நமதூர் ஜின்னா தெருவில் வசிப்பவரும், முன்னாள் நாட்டாண்மை, மர்ஹூம் தாதா ஷரீப் அவர்களின் இளைய மகனார், 44 வயதாகும் சகோதரர் மர்ஜுக் அலி அவர்கள், கடந்த இரு வருடமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனைக்குள்ளானார்,தற்பொழுது அவரது இரு சிறு நீரகங்களும் செயலிழந்துவிட்ட நிலையில்,ஒருநாள்விட்டு,ஒருநாள் இரத்த சுத்தகரிப்பு செய்துவருகிறார்..மருத்துவ செலவிற்கு மிகவும் திண்டாடுகிறார்..தான் துபாயில் ஈட்டிய செல்வத்தை எல்லாம் இந்நோயிக்காக செலவழித்துவிட்டார்..
ஒருமுறை இரத்தம் சுத்தகரிப்பு செய்ய ரூ3500 செலவாகிறது..
மேலும் அவர் சிறுநீரகம் பெற வரிசையில் காத்திருக்கிறார்.. அப்படி சிறுநீரகம் கிடைத்தால்,அறுவை சிகிச்சை செய்ய சுமார் ஏழு இலட்சம் ஆகுமாம்...
தயவு செய்து அவருக்கு உதவி கரம் நீட்டுங்கள்...சிறு தொகையாக இருந்தாலும் பரவாயில்லை..
வல்ல ரஹ்மான் உங்களுக்கு நிறைய ரஹ்மாதையும்,பரக்கத்தையும் வழங்குவான்..
தயவுசெய்து முன்வாருங்கள்...
நமது சகோதரரை காப்பாற்றுங்கள்...
நான் சிங்கையில் என்னால் முடிந்த தொகையை வசூல் செய்ய ஏற்பாடு செய்து வருகிறேன்...
விரைவில் அவரது தொடர்பு எண்ணை உங்களுக்கு தெரியபடுத்துகிறேன்..
மர்ஜுக் ஒரு காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்..
வாகன ஓட்டுனராக பணிபுரிந்தார்,ஊருக்கெல்லாம் நன்கு அறிமுகமான,பழக இனிமையான நபர்..ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர்,சிறு
வயதிலேயே உழைக்க ஆரம்பித்தார்.துபாய் பயணம் சென்று பொருள் ஈட்டினார்.தனது குடும்பத்தை முன்னெற்ற பாதைக்கு இட்டுச்சென்றார்..கடின உழைப்பாளி.. திருமணமாகி, இரண்டு குழந்தைக்கு தந்தை..
அன்புடன்...
அப்துல் ரவூப்
புதுமனைத்தெரு
(நீடுர்-நெய்வாசல்)
சிங்கை
+6591654076
www.nidurin.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக