விமானத்தை விமான பணிபெண்களிடம் இயக்க சொல்லி விட்டு தூங்க சென்றவிமானிகள்! ! ! !

161 பயணிகளுடன் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்த ஏர் இந்தியா விமானத்தை விமான பணிப்பெண்களை இயக்க சொல்லிவிட்டு விமானிகள் தூங்க சென்ற சம்பவத்தில் தலைமை விமானி,சக விமானி,மற்றும் இரண்டு பணிப்பெண்களை ஏர் இந்தியா விமான நிறுவனம் இடை நீக்கம் செய்தது.
ஏப்ரல் மாதம் 12 ம் தேதி பாங்காக்கில் இருந்து டெல்லி புறப்பட்ட எ1-133 விமானத்தின் இயக்கத்தை தானியங்கி விமான பறத்தல் கட்டுப்பாடு கருவியில் நிலை நிறுத்திவிட்டு தலைமை விமானி பி.கே.சோனி,சக விமானி ரவிந்திர நாத் ஆகியோர் விமானம பறத்தல் அறையை விட்டு வெளியேறி உறங்க சென்று இருக்கிறார்கள்.சுமார் நாற்பது நிமிடங்கள் இருவரும் விமான பறத்தல் அறைக்கு வெளியே செலவழித்தும் இருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் விமானத்தின் இயக்கத்தை விமான பணிபெண்கள் கனிகா கலா,ஜெ.பட் ஆகியோர்கள் கண்காணித்து இருந்திருக்கின்றனர்.
இதனிடையில் கனிகா கலாவின் கை தவறுதலாக தானியங்கி விமான பறத்தல் கட்டுப்பாட்டு கருவியில் பட்டு கருவியின் இயகக்த்தை நிறுத்தி இருக்கிறது.அதனை தொடர்ந்து விமானம் நிலை தடுமாற தொடங்கி இருக்கிறது. விமானம் நிலை தடுமாறுகிறது என்பதனை உணர்ந்து கொண்ட விமானிகள் ஓடி வந்து விமானத்தை கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டு வந்து இருக்கின்றனர்.
ஆனால் இச்செய்தியை மறுத்த ஏர் இந்தியா விமான நிறுவனம், விமான பணிப்பெண்கள் விமான பறத்தல் அறையில் அதிக நேரம் செலவழித்ததை சுட்டி காட்டியே நடவடிக்கை எடுத்து இருக்கிறோம் என்று தெரிவித்து இருக்கிறது.
மும்பையில் இருந்து வெளியாகும் மும்பை மிரர் பத்திரிக்கை இச்செய்தியை வெளியிட்டு இருந்தது.இதனை தொடர்ந்தே ஏர் இந்தியா நிறுவனம் நடவடிக்கைகளுக்க ு முன்னெடுத்து சென்றிருக்கிறது .
அடப்பாவிகளா.... என்னடா நடக்குது?
விமானத்துல குண்டு வைக்கிறது மாத்திரம் தீவிரவாதம் இல்லடா... வெடி குண்டு இல்லாமலேயே 161 பேர்களை கொல்ல பார்த்தானுங்க பாரு இதுவும் தீவிரவாத செயல் தான்...அவிங்களை நல்லா விசாரிங்கையா..ஏ தாவது இயக்கத்துலஇருக்க போறானுங்க!
இவிங்கல்ல எவனாவது ஒருத்தன் இசுலாமியனா இருந்திருக்கனும ்.. என்ன நடந்திருக்கும்?
2001/11/ 7 ஐ மீண்டும் ஆவர்த்திக்க இசுலாமிய தீவிரவாதிகளின் சதி. விமான பணிப்பெண்களால் முறியடிக்கப்பட்டது என்று செய்தி வந்திருக்கும்.www.nidurin,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக