ஞாயிறு, மே 05, 2013

மலேசியாவில் ஞாயிறன்று நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் போட்டி கடுமையாகவுள்ள...


மலேசியாவில் ஞாயிறன்று நடக்கவுள்ள பொதுத் தேர்தலில் போட்டி கடுமையாகவுள்ள தொகுதிகளுக்கு பல்லாயிரக்கணக்கான வாக்காளர்களைக் கொண்டு சேர்க்க விசேட விமானப் பயணங்களுக்கு பிரதமர் நஜீப் ரஸாக் ஏற்பாடு செய்துள்ளார் என எதிர்க்கட்சியினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை பிரதமர் மறுத்துள்ளார். கட்சி ஆதரவாளர்கள் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்துத்தான் இந்த விமானப் பயணங்களுக்கு கட்டணம் செலுத்தினார்கள் என்றும், பிரதமர் அலுவலகம் பணம் கொடுக்கவில்லை என்றும் ஆளும் கட்சியான மலாய் ஐக்கிய தேசிய கழகம் கூறுகிறது. தேர்தலில் வாக்களிக்க தமது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வழமையான பாணியில் இவர்கள் மேற்கொள்ளும் பயணங்கள்தான் இவை என்று அக்கட்சி தெரிவிக்கிறது. மலேசியாவின் சரித்திரத்தில் இதுவரை இல்லாத கடும் போட்டி நிலவுவதாகத் தெரிவிக்கப்படும் இந்தத் தேர்தலின் பிரச்சார காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் அரசாங்கம் ஈடுபட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. நாட்டின் கிழக்கிலுள்ள சபா என்ற மாநிலத்தில் நூறு வயதைத் தாண்டிய வாக்காளர்களின் எண்ணிக்கை சந்தேகத்தை தோற்றுவிக்கும் அளவுக்கு அதிகமாக இருக்கிறது என ஆய்வாளர் ஒருவர் கண்டறிந்து சொல்லியிருந்தார்.www.niduin.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக