புதன், நவம்பர் 06, 2013

உருளைக் கிழங்கின் விலையும் அதிகரித்து வருகிறது!


வடமாநிலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரித்ததை அடுத்து, தற்போது உருளைக் கிழங்கின் விலையும் அதிகரித்து வருவது மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் மட்டும் அல்லாது, தென் மாநிலங்களிலும் வெங்காயத்தின் தேவை மிக அத்தியாவசியமானது. தற்போது வெங்காயத்தின் விலை கிலோ 80 முதல் 90 ரூபாய் வரை விற்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வடமாநிலத்தவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடும் உருளைக் கிழங்கின் விலையும் அதிகரித்து வருவது மக்களை கவலை மற்றும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. முதற்கட்டமாக வடமாநிலங்களில் விலை அதிகரிக்கத் துவங்கி உள்ள உருளைக் கிழங்கின் விலை, தென் மாநிலங்களிலும் பரவக் கூடும் என்கிற அச்சமும் ஏற்பட்டு உள்ளது. தற்போது ஒரு கிலோ உருளைக் கிழங்கின் விலை 16 ரூபாயில் இருந்து 40 ரூபாய் வரை அதிகரித்து உள்ளதே மக்களின் இந்த .அச்சத்துக்கு காரணம். டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப் பேரவைத் நடக்க உள்ளநிலையில், இந்த வெங்காயம், உருளைக் கிழங்கு இவற்றின் மீதான விலை ஏற்றம், மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளதாகத் தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக