சனி, ஜனவரி 07, 2012


08 January, 2012

ஆம்பூர் நியாய விலை கடை ஊழியர்களை எச்சரித்த ஆம்பூர் MLA

காலை 10 மணி ஆகியும் நியாய விலை கடை திறக்க வில்லை, கடை ஊழியர்கள் எங்களிடம் தகாத வார்த்தைகளில் திட்டுகிறார்கள், பொருட்கன் எடை குறைவாக போடுகிறார்கள், போன்ற புகார்களோடு , தினந்தோறும் காலையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களுக்கு ஆம்பூர் பொதுமக்கள் போன் செய்த வண்ணம் இருந்தனர் , இதை தொடர்ந்து கடந்த 14/12/11 அன்று தாலுக்கா அலுவலகத்தில் . வட்ட வழங்கல் அதிகாரி, தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் , ஆம்பூரில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்களையும் அழைத்து அவசர கூட்டம் நடத்தினார், காலையில் 9 மணிக்கே எல்லா கடைகளைகளையும் திறக்கவேண்டும் என்றும், பொதுமக்களிடம் நல்லமுறையில் பேசவேண்டும் எனவும், எடை சரியாக இருக்க வேண்டும் என்றும், அறிவுரித்தியதோடு இதை மீறும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தார் , இந்த கூட்டத்தில் மமக மாவட்ட செயலாளர் நசீர், மாவட்ட பொருளாளர் மிஸ்பாஹ் , மமக நகர செயலாளர் ஹமீத், தமுமுக நகர செயலாளர் தப்ரேஸ் ஆகியோர் உடனிருந்தனர்.ஆம்பூர்  நியாய விலை கடை ஊழியர்களை எச்சரித்த ஆம்பூர் MLA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக