சனி, ஜனவரி 07, 2012



நல்லுறவுக்கு புத்தாண்டு பரிசு பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 359 இந்தியர்கள் விடுதலை

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperபுதுடெல்லி : சிறைகளில் உள்ள 180 இந்தியர்கள், 179 மீனவர்கள், அப்பாவி மக்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. நல்லெண்ண அடிப்படையிலும் புத்தாண்டு பரிசாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடல் எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள், தெரியாமல் எல்லை தாண்டிய பொதுமக்கள், சந்தேகத்தின் அடிப்படையில் எல்லையில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் நூற்றுக்கணக்கில் பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இந்திய சிறைகளிலும் பாகிஸ்தானியர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். அவர்களை விடுவிக்க இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு நடத்தி அவ்வப்போது சிலர் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இருநாட்டு உறவை பலப்படுத்தவும், நம்பிக்கையை ஏற்படுத்தவும், புத்தாண்டு பரிசாகவும் 180 இந்தியர்கள், 179 மீனவர்கள், பொதுமக்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முன்வந்துள்ளது. இவர்கள் அனைவரும் இன்று விடுவிக்கப்படுகின்றனர். அதன்பின், எல்லோரும் கராச்சியில் இருந்து லாகூருக்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து வாகா எல்லை வழியாக நாளை இந்தியாவுக்கு திரும்புவார்கள். அதன்பின் அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சிந்து மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாகிஸ் தான் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும், கைதிகள் நல்வாழ்வு கமிட்டித் தலைவருமான நசீர் அஸ்லம் ஜாகித் கூறுகையில்,இப்போது விடுவிக்கப்படும் இந்திய மீனவர்கள் தவிர மேலும் 276 பேர் பாகிஸ்தான் சிறைகளில் உள்ளனர். அவர்களில் 83 பேர் தண்டனை காலம் முடிந்து  விட்டது. எனினும், அவர்கள் இந்திய பிரஜைகள்தான் என்பதை இந்தியா இன்னும் உறுதி செய்யவில்லை. அதனால் தொடர்ந்து சிறைகளில் உள்ளனர்ÕÕ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக