வியாழன், ஜனவரி 19, 2012

தானே நிவாரண நிதி: முதல்வரிடம் ரூ.12.52 கோடி வழங்கினர்


தானே புயல் நிவாரண நிதி: முதல்வரிடம் ஒரே நாளில் ரூ.12.52 கோடி வழங்கினர்
 1/1 
சென்னை, ஜன.20 - தானே புயல் நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று ஒரே நாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் சுமார் ரூ.12.52 கோடி நிதி அளித்தனர். தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்ட மறுவாழ்வு பணிக்காக நிதி உதவி செய்யும்படி தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி தினந்தோறும் இதற்கான நிதி குவிந்து வருகிறது. நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பலர் நேரில் சந்தித்து நிவாரண நிதி அளித்தனர்.  இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தானே புயலால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் நேற்று (19.1.2012) தலைமைச் செயலகத்தில் கீழ்க்கண்டவர்கள் நிதியுதவி வழங்கியவர்கள் விபரம் வருமாறு:-
1.மாநில போக்குவரத்து கழகங்களின் சார்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ​ 6 கோடியே 85 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய். 2.ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர். வெங்கடாச்சலம் 51 லட்சத்து 11 ஆயிரத்து 1 ரூபாய்.
3.சிவா குழுமத்தின் தலைவர் சி. சிவசங்கரன் ​ 2 கோடி ரூபாய். 4.தஞ்சாவூர், சாஸ்திரா பல்கலைக்கழகத்தின் சார்பில் 1 கோடி ரூபாயும், மாணவர்களின் சார்பில் 12 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயும், பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 11 லட்சத்து 11 ஆயிரத்து 968 ரூபாயும் வழங்கப்பட்டது. 5.எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் மற்றும் இணை வேந்தர் ரவிபச்சமுத்து ​ 50 லட்சம் ரூபாய். 6.கடலூர், ஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர் வி. பாலு 25 லட்சம் ரூபாய். 7.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடலூர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அதன் செயலாளர் வி.கே. மாரிமுத்து 25 லட்சம் ரூபாய். 8.அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் பி. மன்னர் ஜவகர் மூலம் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் ​ 20 லட்சம் ரூபாய். 9.சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கர்னல் டாக்டர் ஜி. திருவாசகம் மூலம் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஒரு நாள் ஊதியம் 15 லட்சம் ரூபாய். 10.சட்டமன்ற உறுப்பினர் ஆர். சரத்குமார் ​ 10 லட்சம் ரூபாய். 11.தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் ​ 5 லட்சம் ரூபாய். 12.ராஜலஷ்மி கல்வி நிலையங்களின் தலைவர் எஸ். மேகநாதன் ​ 10 லட்சம் ரூபாய். 13.சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வைகைசெல்வனின் ஒரு ஆண்டு ஊதியத்தொகை ​ 6 லட்சம் ரூபாய்.
14.திருச்சிராப்பள்ளி நகர ஜெயலலிதாபேரவையின் சார்பாக அதன் செயலாளர்  ஜெ. சீனிவாசன் ​ 5 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய். 15. சென்னை, டவர்ஸ் கிளப் சார்பாக அதன் தலைவர் டி. பரந்தாமன் ​ 5 லட்சம் ரூபாய். 16.ஜெயலலிதா பேரவை செயலாளர் டி.ஆர். அன்பழகன் ​ 5 லட்சத்து 200 ரூபாய். 17. ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் பி.ஆர். நம்பிராஜ் ​ 5 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய். 18.திருநெல்வேலி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தின் இணைச் செயலாளர் வி. ஜெய்சங்கர் ​ 4 லட்சத்து 77 ஆயிரத்து 700 ரூபாய். 19.  ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஆர். நட்ராஜ், 10 ஆயிரம் ரூபாய். 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக 12 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரத்து 869 ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (19.1.2012) அளிக்கப்பட்டுள்ளது.முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 19 கோடியே 53 லட்சத்து 55 ஆயிரத்து 646 ரூபாயாகும்.இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக