வியாழன், ஜனவரி 12, 2012

சென்னைக்கு 14, 15ம் தேதியில் சிறப்பு விமானங்கள் : ஏர் இந்தியா அறிவிப்பு!



சென்னை: கோவை-சென்னை இடையே, வரும் 14, 15ம் தேதியில், ஏர் இந்தியா சிறப்பு விமானங்களை இயக்குகிறது. ஏர் இந்தியா சார்பில், கோவையில் இருந்து சென்னைக்கு இரண்டு சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் ஒரு வழி பயணத்துக்கு, சிறப்பு கட்டணமாக ரூ.1884 முதல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி, மாலை 3.30 மணிக்கு, ஏ.ஐ.,2538 விமானம், கோவையில் இருந்து புறப்படுகிறது. மாலை 4.30 மணிக்கு, சென்னையை அடைகிறது.

இரண்டாவது விமானம் ஏ.ஐ.,1538, மாலை 4.00 மணிக்கு புறப்பட்டு, மாலை 5 மணிக்கு, சென்னை சென்றடைகிறது. வரும் 15ம் தேதி பகல் 12.20 மணிக்கு, ஏ.ஐ.,570 விமானம் புறப்பட்டு, பகல் 1.20 மணிக்கு சென்னையை அடைகிறது. மேலும் விபரங்களுக்கு, 1800-180-1407 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என  ஏர் இந்தியா அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக