புதுடெல்லி: தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும், முஸ்லிம்களுக்கான 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டிற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 24 ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதி முறைகளும் தற்போது அமலில் உள்ளன. இந்த நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வரும் 27 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து, முஸ்லிம்களுக்கு மட்டும் தனியாக 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய ஊழியர் நல துறை அமைச்சகம் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் தேர்தல் முடியும் வரை தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும், முஸ்லிம்களுக்கான 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும், எனவே இந்த திட்டத்திற்கு தடை விதித்து உள்ளதாகவும், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக