புதன், ஜனவரி 11, 2012

ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : தரையிறக்கம் செய்யப்பட்ட விமானம்!


மும்பை: மும்பையிலிருந்து தலைநகர் புதுடெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென்று வெடிகுண்டு வைத்திருப்பதாக தகவல் வந்ததையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஏர் இந்தியா (ஏர்பஸ் ஏ-319) விமானம் 117 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் இன்று காலை 7 மணிக்கு (இந்திய நேரம்) மும்பை விமான நிலையத்தில் இருந்து தலைநகர் புதுடெல்லிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஏர் இந்தியா அழைப்பு நிலையத்திற்கு வந்த அழைப்பில், விமானத்தில் உள்ள ஒரு சாமான் பையில் குண்டு இருப்பதாக தகவல் வந்தது.

இதனையடுத்து, அந்த விமானத்தை உடனே தரையிறங்குமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்குள் விமானம் புதுடெல்லியை அடைந்து விட்டதால் அங்குள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை 8.57 மணிக்கு தரையிறக்கப்பட்டது. உடனே அந்த விமானத்தை பயணிகளுடன் தனிவான இடத்திற்கு கொண்டு சென்றனர். இதையடுத்து காலை 9.15 மணிக்கு பயணிகளை இறக்கிவிட்ட பிறகு விமானம் சோதனையிடப்பட்டது. ஆனால் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை. யாரோ வேண்டும் என்றே பொய்யான தகவலை கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக