மாஸ்கோ : மேற்கத்திய நாடுகளின் மிரட்டலை அடுத்து, போர் ஒத்திகையில் ஈடுபட ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது. இத்தகவலை ரஷ்யாவின் பார்ஸ் நியூஸ் ஏஜென்சி வெளியிட்டுள்ளது. ஈரானில் அணுசக்தி திட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது. அணுஆயுதங்களை தயாரிப்பதாகவும், அவற்றை உடனே நிறுத்த வேண்டும் என்றும், ஐ.நா மற்றும் சர்வதேச அணுசக்தி கழக பிரதிநிதிகள் ஈரானில் ஆய்வு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. அணுசக்தி திட்டங்களை நிறுத்தாவிட்டால், ஈரான் மீது போர் தொடுக்கும் நிலை உருவாகும் என்று அமெரிக்கா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.இந்நிலையில், ஹார்மஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் படை போர் ஒத்திகையை அடுத்த வாரம் நடத்த ஈரான் அரசு திட்டமிட்டுள்ளது. ஈரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் அகமது வாஹிதி, ÔÔஇஸ்லாமிய புரட்சி படை வீரர்கள், கப்பல் போர் ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்ÕÕ என்று சமீபத்தில் கூறினார். அதன் அடிப்படையில் அடுத்தவாரம் இந்த போர் ஒத்திகை நடத்தப்படும் என்று பார்ஸ் நியூஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. சமீபத்தில் தான் ஈரான் கப்பல் படை வீரர்கள் ஹார்மஸ் ஜலசந்தியில் 10 நாள் பயிற்சியில் ஈடுபட்டு முடித்தனர். அதன் தொடர்ச்சியாக போர் ஒத்திகை நடத்த உள்ளதால் பல நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக