புதுடெல்லி: நாட்டை இழிவுப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி ஒளிபரப்பியது தொடர்பாக, பி.பி.சி தொலைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று பி.பி.சியில் ஒளிபரப்பன டாப் கியர் என்ற சிறப்பு நிகழ்ச்சியில், தொகுப்பாளர் ஜெர்மி கிளார்க்சன், இந்திய உணவுகள், ரயில்கள், கழிப்பறைகள் மற்றும் கலாச்சாரம் பற்றி இழிவாக பேசியதாக தெரிகிறது.
இந்நிலையில், இனவெறியை தூண்டும் வகையில் அந்த நிகழ்ச்சி இருந்ததாகவும், இது தொடர்பாக பி.பி.சி தொலைக்காட்சி மன்னிப்பு கோருமாறும் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரகம் கடிதம் அனுப்பியுள்ளது. இந்திய தூதரகத்திடம் பதில் அளிக்கப்படும் என்று பி.பி.சி உறுதி அளித்துள்ளது. இந்நிலையில் இவ்விவகாரத்தில் பிரிட்டன் அரசு தலையிடாது என்றும், பி.பி.சி தான் இதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ள

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக