புதன், பிப்ரவரி 01, 2012

அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்


.
சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியதும், தேர்தல் தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தே.மு.தி.க. தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த், அ.தி.மு.க. அரசு மீது புகார் தெரிவித்தார்.
இதனால் விஜயகாந்துக்கும், அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கும் இடையே காரசார பேச்சு நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையல் விஜயகாந்த் பேசி கொண்டிருந்த போது திடீரென முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு பதில் அளித்தார். அப்போது சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தே.மு.தி.க தனித்து நின்று போட்டியிட தயாரா என்றும் ஜெயலலிதா சவால் விடுத்தார். இதற்கு தே.மு.தி.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, அ.தி.மு.க.வினருக்கும், தே.மு.தி.க. உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்ததாக கூறி விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற அவைத் தலைவர் ஜெயக்குமார் அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக