வெள்ளி, பிப்ரவரி 03, 2012

தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



நீதிபதி தேர்வில் பங்கேற்க வயது வரம்பு நிர்ணயிப்பதற்கு கண்டனம் தெரிவித்து வழக்கறிஞர்கள் நடத்தும் இந்த போராட்டத்தில் சுமார் 60-ஆயிரம் வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். உயர்நீதிமன்றத்தில் 45 முதல் 55-வயது வரை உள்ள வழக்கறிஞர்களை நீதிபதிகளாக தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் குடிமையியல் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வில் 35-முதல் 40-வயதுவரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வயது வரம்பை நீக்கக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக