
தமிழகத்தில் சட்டக்கல்வி வழங்கும் தனித்திறன் வாய்ந்த சட்டப்பள்ளியாக ஸ்ரீரங்கத்தில் அமைய உள்ள சட்டப்பள்ளி இருக்கும் என்று சட்ட முன்வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் துணை வேந்தராக உயர்நீதிமன்ற நீதிபதி செயல்படுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று சட்டமன்ற உறுப்பினரக்ளுக்கான தொகுதிபடியை உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா சட்டமுன்வரைவு ஒன்று தாக்கல் செய்தார். அதில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த தொகுதிப்படி ரூபாய் 5-அயிரத்தில் இருந்து 10-ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் 10-ஆயிரத்திலிருந்து 12-ஆயிரமாகவும், மறைந்த உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 6-ஆயிரமாகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக