ஞாயிறு, மார்ச் 11, 2012

இதுவரை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் 320 ஆபரேசன்

சென்னை, மார்ச். 11 - முதல்வரின் புதிய காப்பீட்டு திட்டத்தில் 320 ஆபரேசன் செய்து சென்னை அரசு மருத்துவமனை முதலிடம் பெற்று இழப்பிட்டு தொகையாக ரூ.28 லட்சம் பெற்றது. முதல்​ அமைச்சர் ஜெயலலிதா புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்கள் உயிர்காக்கும் உயர் சிகிச்சை பெறும் வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 4 வருடத்துக்கு ரூ.4 லட்சம் ஒரு குடும்பத்துக்கு மருத்துவ காப்பீடு அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கி ஒருமாதம் ஆகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் போட்டி போட்டுக் கொண்டு அறுவை சிகிச்சைகளை செய்து வருகிறார்கள். இதுவரை நடந்த மொத்த அறுவை சிகிச்சையில் சென்னை அரசு மருத்துவமனை முதலிடம் வகிக்கிறது. 848 பேர் விண்ணப்பித்து இருந்ததில் 613 பேருக்கு சிகிச்சை செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. இதில் 320 பேருக்கு பல்வேறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 94 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதலிடம் பெற்றுள்ளது. இதன் மூலம் யுனைடெட் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.28 லட்சத்து 36 ஆயிரம் காப்பீட்டு தொகையை இந்த மருத்துவமனை பெற்றுள்ளது. 2​வது இடத்தில் கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவ மனையும், 3​வது இடத்தில் மதுரை தேவகி கேன்சர் மருத்துவமனையும் பெற்றுள்ளது.

சென்னை அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்க 250 படுக்கைகள் உள்ளன. இருதயம், புற்று நோய், சிறுnullரகம், குடல், ரத்தம் தொடர்பான நோய்கள், கல்லீரல், நரம்பு, எலும்பு முறிவு, உள்ளிட்ட 12 மருத்துவ துறையின் கீழ் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் கனகசபை தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக