திங்கள், ஜூன் 11, 2012

பெங்களூர் நித்யானந்தா ஆசிரமத்துக்கு சீல். கைது செய்ய முதல்வர் உத்தரவு.


பெங்களூர் அருகே பிடதியிலுள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சீல் வைத்துள்ள கர்நாடக அரசு, ஆசிரமத்தில் சோதனை நடத்தி,சொத்துக்களை கைப்பற்றவும், ஆசிரமம் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் உள்ளது.கடந்த சில நாட்களுக்கு முன் கன்னட அமைப்பினர் மீது நித்யானந்தாவின் சீடர்கள் தாக்குதல் நடத்தினார். இதைக்கண்டித்து கன்னட அமைப்பினர் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால்,ஆசிரமத்தை கண்காணிக்க அதிகாரி நியமிக்கப்படுவார் என்று அரசு அறிவித்தது. ஆசிரமம் மீதும் அங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்தும் அரசுக்கு பல்வேறு குற்றச்சாட்டு தொடர்ந்து வருவதால் அதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி கலெக்டருக்கும்,மாவட்ட போலீஸ் எஸ்.பி.க்கும் கர்நாடக முதல்வர் சதானந்த கவுடா உத்தரவிட்டார். இதையடுத்து ராம் நகர் மாவட்ட கலெக்டர் வி.ஸ்ரீராமரெட்டி, எஸ்பி அனுபம் அகர்வால் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி இன்று காலை அறிக்கை சமர்ப்பித்தனர். இந்நிலையில் இன்று மதியம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து நித்யானந்தா ஆசிரமத்துக்கு சீல் வைத்துள்ள கர்நாடக அரசு, ஆசிரம் குறித்த குற்றச்சாட்டுக்களை குறித்து விசாரணை ந்டத்தவும், ஆசிரமத்தில் சோதனை நடத்தி, சொத்துக்களை கைப்பற்றவும் உத்தரவிட்டுள்ளது. இந்த சோதனையின் அடிப்படையில் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தை அரசு ஏற்குமா என்பது விரைவில் தெரியவரும். கைது செய்ய உத்தரவு இதனிடையே நித்யானந்தா மீதான ஜாமீன‌ை ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில்,அவரை கைது செய்யவும் முதல்வர் சதானந்தா உத்தரவிட்டுள்ளார். இதனால் நித்யானந்தா எந்த நேரத்திலும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர் ஏறகனவே தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக