திங்கள், டிசம்பர் 17, 2012

கறுப்பு பணம் பதுக்கப்படுவதை தடுக்க புதிய சட்டமூலத்தை உருவாக்கும் முயற்சியில் சுவிஸ் அரசு


சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்குவதை தடை செய்யும் வகையில் சட்டம் ஒன்றை இயற்றுவதற்கு சுவிற்சர்லாந்து அரசு முடிவு செய்துள்ளது. இச்சட்டத்தை இயற்றுவது தொடர்பில் வரைவு மசோதாவை அளிக்குமாறு பெடரல் கவுன்சில் அந்நாட்டின் நிதித்துறை அமைச்சகத்தை கேட்டுக்கொண்டுள்ளது. இதன் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை மற்றும் வரி செலுத்தாத பணத்தொகை சேமிப்பு தொடர்பிலான பிரச்சினைகளை ஒடுக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பிரபல தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அணில் அம்பானி உள்ளிட்ட 700 பேர் சுவிற்சர்லாந்தின் HBSC வங்கி கிளைகளில் ரூ.6000 கோடி அளவுக்கு கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பதாக அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர் அர்விந்த் கேஜ்ரிவால் பரபரப்பு புகார் விடுத்திருந்தார். மேலும் சுவிற்சர்லாந்தில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக