புதன், டிசம்பர் 26, 2012

ஆசிட் வீச்சில் அலங்கோலமாகி உதவியின்றி தவிக்கும் வினோதினி.. கண் திறக்குமா அரசுகள்!


சென்னை: எல்லோரும் டெல்லி பாலியல் பலாத்காரத்தைப் பற்றி மட்டுமே வாய் வலிக்கப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் காதலை ஏற்க மறுத்த குற்றத்திற்காக ஆசிட் வீச்சிற்கு ஆளாகி வாழ்க்கையை இழந்து தவிக்கும் புதுச்சேரி வினோதினியின் அவல நிலை எந்த அரசாங்கத்தின் கண்ணுக்கும் தெரியவில்லை. பண வசதியின்றி பரிதவித்துக் கலங்கிப் போய் நிற்கிறார் வினோதினி. காரைக்கால் நகரில் வசித்து வரும் ஜெயபால் என்பவரின் மகள் வினோதினி. சென்னையில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் தீபாவளிக்கு வினோதினி ஊருக்கு சென்ற போது அவரை ஒருதலையாக காதலித்த சுரேஸ் என்ற கட்டிட தொழிலாளி, ஆசிட் ஊற்றி வினோதியின் முகத்தை சிதைத்து விட்டான். கண் நரம்புகள் பொசுங்கிப் போனதால் வினோதினியின் பார்வை பறிபோய்விட்டது. வாய் கோரமாக சேதமடைந்துள்ளது. வாய் வழியாக உணவு செலுத்த முடியாததால் மூக்கு வழியாக திரவ உணவு செலுத்தப்பட்டு வருகிறது. அதோடு அவரது முகம், மார்பு, அடிவயிறு, கை ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக