சனி, ஏப்ரல் 27, 2013

சீனா, தைவானில் பறவைக் காய்ச்சல்! 22 பேர் பலி!


H7N9 என்ற புதிய வகை பறவைக் காய்ச்சல் தைவானில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக சீனாவில் 22 பேரைப் பலி கொண்ட இந்த வகை பறவைக் காய்ச்சல் நோய், தற்போது தைவானுக்கும் பரவியுள்ளது. சீனாவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட இந்தவகை பறவைக் காய்ச்சலால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர், 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். H7N9 என்றழைப்படும் இந்தவகை பறவைக் காய்ச்சல் சீனாவுக்குப் சென்று வந்த தைவானைச் சேரந்த வணிகரைத் தாக்கியுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கான சிகிச்சையை துரிதப்படுத்தும் வகையில் தைவானில் கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது வரை அங்கு 120 க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 50 க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக