புதன், ஏப்ரல் 03, 2013

ஓட்டுனரின் சாமர்த்தியம் - 60 பயணிகள் உயிர் தப்பினர்!


தேனி: தேனியிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் தீ விபத்திலிருந்து தப்பியது. தேனியில் இருந்து மதுரைக்கு 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று இன்று பகல் 12:15 மணிக்கு புறப்பட்டது. சிறிது நேரத்தில் பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை மூட்டமாக எதிரே சாலையே தெரியாத அளவிற்கு கிளம்பியது. இதை பார்த்ததும் ரோட்டில் சென்றவர்களும் எதிரில் வாகனங்களில் வந்தவர்களும் டிரைவரிடம் சைகை காட்டி பஸ்சை நிறுத்தக் கூறினர். இதனிடையே பஸ்ஸின் உள்ளேயும் புகை பரவி திடீரென தீ பிடிக்கத் தொடங்கியது. உடன் பஸ்ஸை நிறுத்திய ஓட்டுனர் அனைத்து பயணிகளையும் வெளியேறுமாறு கோரினார். பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடிக்க தொடங்கினர். இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். ல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, 60 பயணிகளும் எந்தவித சேதமுமின்றி உயிர் தப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக