
செவ்வாய், ஏப்ரல் 30, 2013
கூனிமேடு வன்முறை! இஸ்லாமிய கூட்டமைப்பினர் நேரில் ஆறுதல்!

சனி, ஏப்ரல் 27, 2013
சீனா, தைவானில் பறவைக் காய்ச்சல்! 22 பேர் பலி!
சீனாவில் கடந்த மாதம் கண்டறியப்பட்ட இந்தவகை பறவைக் காய்ச்சலால் இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர், 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
H7N9 என்றழைப்படும் இந்தவகை பறவைக் காய்ச்சல் சீனாவுக்குப் சென்று வந்த தைவானைச் சேரந்த வணிகரைத் தாக்கியுள்ளது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கான சிகிச்சையை துரிதப்படுத்தும் வகையில் தைவானில் கூடுதல் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது வரை அங்கு 120 க்கும் மேற்ப்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 50 க்கும் மேற்ப்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு கடன் அளிக்க மறுக்கும் பொதுத்துறை வங்கிகள்! சட்டப்பேரவையில் எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டு

வெள்ளி, ஏப்ரல் 26, 2013
இந்தியாவிலுள்ள அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஒரு அறிவிப்பு..

வெளிநாடுகளில் அல்லல்படும் இந்தியர்களுக்கு தூதரகம்மூலம் உதவி செய்யப்படுகிறது

சொல்வதெல்லாம் உண்மை" , நிறுத்து உடனடியாக......!!
சொல்வதெல்லாம் உண்மை" , நிறுத்து உடனடியாக......!!
இவ யாரு? இவ பெயர் என்ன? இவ என்ன தலைமை நீதிபதியா? இல்ல, குடும்பநல நீதிமன்ற நீதிபதியா?.இந்த நிகழ்ச்சிய உடனடியா நிறுத்தி போடணும் அம்மா, இல்லாட்டி , உங்கள நிறுத்தவேண்டி வரலாம். இந்த நிகள்சியை தடைசெய்ய அனைத்து உள்ளங்களும் ஒத்துழைப்பு கொடுத்து, இதை பகிரவும் உறவுகளே.
கோவை வணிக வளாகத்தில் நேற்றுகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 4 பெண்கள் கருகி பலியாயினர்.

வியாழன், ஏப்ரல் 25, 2013
பெண்கள், குழந்தைகளை காவல் நிலையத்துக்கு அழைக்கக் கூடாது: முதல்வர்

புதன், ஏப்ரல் 24, 2013
எச்சரிக்கை !!! எச்சரிக்கை !!!! ரெத்தம் கொதிக்கும் பதிவு இது!!!!!
செவ்வாய், ஏப்ரல் 23, 2013
காவல் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும்: முதல்வர்
சென்னை, ஏப்.24 - காவல் துறையினருக்கான பயிற்சி மையங்கள் ரூ.38 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். காவல்துறை மானியக்கோரிக்கைக்குப்பிறகு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவலர் பயிற்சிப் பிரிவின் கீழ் காவலர் உயர் பயிற்சியகம், காவலர் பயிற்சிக் கல்லுாரி, காவலர் தேர்வு பள்ளிகள் மற்றும் பணியிடைப் பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கி வருகின்றன. இரண்டாம் நிலை காவலர்களுக்கு காவல் பயிற்சிப் பள்ளியில் 22 வாரங்களுக்கு மட்டுமே அடிப்படைப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. விரிவான பயிற்சி திட்டத்திற்கு குறைந்தது 7 மாத கால அளவு அடிப்படை பயிற்சியும், 1 மாத கால செயல்முறை பயிற்சியும் தேவைப்படுவதால் பயிற்சிக் காலத்தை நீட்டித்து 7.3.2012-ல் அரசாணை வெளியிடப்பட்டது.
இதனை கருத்திற்கொண்டு, சென்னை, அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சி கல்லூரி மற்றும் தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, வேலூர், கோயம்புத்தூர், ஆவடி, விழுப்புரம், சேலம் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பரங்கிமலை, புதுப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சேலம், கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள காவலர் பயிற்சி மையங்களின் கட்டுமான வசதிகள் 38 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் கூறியுள்ளார். www.nidurin.com
சவூதி வாழ் மக்களுக்கு ஒரு நினைவூட்டல் செய்தி

ஞாயிறு, ஏப்ரல் 21, 2013
சீனாவில் பூகம்பம்; 150 பேர் பலி, ஆயிரக் கணக்கானோர் காயம்
சீனாவின் தென்மேற்குப் பிராந்தியமான சிச்சுவான் மாகாணத்தில் உள்ள பின்தங்கிய மாவட்டமொன்றில் ஏற்பட்டுள்ள பூகம்பத்தில் 150க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் காயப்பட்டுள்ளனர்.
திபெத்திய பீடபூமியின் அடிவாரத்தில் இருக்கின்ற கிராமம் ஒன்று முழுவதுமாக அழிந்துவிட்டதுபோல காட்சியளிப்பதாக சீன அரச ஊடகம் கூறுகிறது.
தொடர்புடைய விடயங்கள்
உலகம், புவி வெப்பமடைதல், புனர்வாழ்வு
மற்றபல பகுதிகளில் வீடுகள் தரைமட்டமாகியுள்ளன.
மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மேற்கு செங்க்டூ பிராந்தியத்திற்கு படையினர் சுமார் 6000 பேர் அனுப்பப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில் பலரை மீட்புப் பணியாளர்கள் மீட்டுவருவதை தொலைக்காட்சிகள் காண்பிக்கின்றன.
மீட்பு நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக பிரதமர் லீ கெக்கியாங் அங்கு விரைந்துசென்றுள்ளார். உள்ளூர் நேரப்படி காலை 8 மணியளவில் தாக்கிய பூகம்பம் மக்னிடியூட் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.
இதே சிச்சுவான் பிராந்தியத்திலேயே 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.
சனி, ஏப்ரல் 20, 2013
இன்றைய உலகில் பெண்களின் நாகரிகம் !!!!

தோழர்கள் கவனத்திற்கு அவசரம் பகிரவும் மற்றும் உதவவும் !
வெள்ளி, ஏப்ரல் 19, 2013
ஈரானில் மீண்டும் நிலநடுக்கம்

வியாழன், ஏப்ரல் 11, 2013
'மிஹின் லங்கா தமிழகத்துக்கான சேவைகளை நிறுத்துகிறது

செவ்வாய், ஏப்ரல் 09, 2013
அரக்கோணம் அருகே விரைவு ரெயில் தடம்புரண்டு பயணிகள் 4 பேர் பலி - 30 பேர் காயம்



திங்கள், ஏப்ரல் 08, 2013
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்து த.மு.மு.க ஆர்ப்பாட்டம்!
சனி, ஏப்ரல் 06, 2013
டெல்லி மாணவி பலாத்கார குற்றவாளியின் கை முறிவு: சக கைதிகள் தாக்கியதாக புகார்

வெள்ளி, ஏப்ரல் 05, 2013
வெளிநாட்டினருக்கு எதிரான சவூதி சட்டம் - நிறுவனங்களுக்கு 2 மாதம் கெடு?
ரியாத்: சவூதி அரசின் வெளிநாட்டு பணியாளர்களுக்கு எதிரான புதிய சட்டத்தின் காலக் கெடுவை 2 மாதகாலம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"சவுதி அரேபியாவைச் சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து, 25 லட்சம் பேர் வேலையின்றி தவிப்பதால், அவர்களுக்கு வேலை வழங்குவதற்காக நிதாகத் சட்டத்தை அந்நாட்டு அரசு கொண்டு வந்திருக்கிறது. இதனால் அங்கு பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கான தமிழக தொழிலாளர்களின் வேலைக்கு இந்த புதிய சட்டத்தின் மூலம் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது.
சவுதி அரசின் இந்த நடவடிக்கையால் மொத்தம் 20 லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும், இதில் பெருமளவில் இந்தியர்கள் பாதிக்கப் படுவார்கள் என்றும் கூறப் படுகிறது.
இந்த சட்டம் அமுல்படுத்தப் பட்டு கடந்த சிலதினங்களாக, கெடுபிடி அதிகரித்து, தகுந்த உரிமம் இல்லாமல் பணிபுரியும் வெளிநாட்டு தொழிளாலர்கள் பலர் கைது செய்யப் படுவதோடு அவரவர்களின் நாட்டிற்கு அவர்கள் திருப்பி அனுப்பப் படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இந்த திடீர் நடவடிக்கைக்கு பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த நிதாகத் சட்ட நடவடிக்கைக்கு,வங்கிகள், காய்கறி அங்காடிகள்,நகைக்கடைகள்,இன்னும் சில நிறுவனங்களுக்கு மட்டும் மேலும் 2 மாதம் அதாவது (ஜூன் 9 ஆம் தேதிவரை) கெடு விதித்திருப்பதாக ஒரு சவூதி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது குறிப்பிடப் பட்டுள்ள இரண்டு மாதத்திற்குள், ஏற்கனவே அறிவித்துள்ளபடி சவூதி நாட்டினரை வேலைக்கு அமர்த்துவதோடு, நிறுவனங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள வரைமுறைபடி மட்டும் வெளிநாடு பணியாளர்கள் அமர்த்தப் பட வேண்டும். மீறினால் இதுவரை இல்லாத அளவுக்கு நிறுவனங்களும் வெளிநாட்டு பணியாளர்களும் தண்டனைக்கு உள்ளாக்கப் படுவர் என்று அதில் கூறப் பட்டுள்ளது.
நைஜீரியா: பஸ் மற்றும் பெற்றோல் டேங்கர் மோதிக்கொண்ட விபத்தில் 35 பேர் பலி

வியாழன், ஏப்ரல் 04, 2013
காதலியை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற கல்லூரி மாணவன் பிடிபட்டார்
சென்னை : காதலி தன்னை விட்டு வேறு ஒரு மாணவனை காதலித்ததால் ஆத்திரம் அடைந்த மற்றொரு மாணவன் துப்பாக்கியால் இருவரையும் சுட்டு கொல்ல முயன்றான். துப்பாக்கியை இயக்க தெரியாததால் தலையில் ஓங்கி அடித்து விட்டு ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் மதுரவாயலில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஆதித்யா காயி (22). மதுரவாயலில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பிடெக் இறுதி ஆண்டு படிக்கிறார். இவருடன் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த ஹேமந்தி தாஸ் (22) படிக்கிறார். நண்பர்களாக பழகிய இருவரும் காதலிக்க தொடங்கினர். பின்னர், மதுரவாயல் கம்பர் நகரில் வாடகைக்கு அறை எடுத்து ஒன்றாக தங்கினர். 6 மாதங்களுக்கு முன்பு திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
அதே கல்லூரியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மணீஸ் குமார் (23) என்பவரும் பிடெக் இறுதியாண்டு படித்தார். மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஹேமந்தி தாசுக்கு மணீஸ் குமார் ஆறுதல் கூறினார். பின்னர் மணீஸ் குமாரும் ஹேமந்தி தாசும் காதலிக்க தொடங்கினர். இதையறிந்த ஆதித்யா ஆத்திரம் அடைந்தார். இருவரையும் கண்டித்தார்.
இதை தொடர்ந்து ஆதித்யா அறையில் இருந்து ஹேமந்தி தாஸ் வெளியேற முடிவு செய்தார். இதை தெரிந்து கொண்ட ஆதித்யா, ஹேமந்தி தாசின் பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் அவருக்கு தெரியாமல் எடுத்து வைத்துக் கொண்டார். இதற்கிடையில், ஆதித்யாவின் அனைத்து சான்றிதழ்களையும் ஹேமந்தி தாஸ் எடுத்து வைத்துள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் அவரவர் சான்றிதழ்களை பெற்றுக் கொள்வது என ஹேமந்தி தாசும், ஆதித்யாவும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்படி, மதுரவாயல் காவல் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் அவரவர் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடிவு செய்தனர்.
சொன்னபடி ஹேமந்திதாஸ் மணீஸ் குமாருடன் பைக்கில் வந்தார். இது ஆதித்யா வுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சிறிது நேரத்தில் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோபம் அடைந்த ஆதித்யா “எனது காதலியை நீ அபகரித்து விட்டாய். அவள் இல்லாமல் நான் தினமும் செத்து பிழைக்கிறேன். அவளை என்னிடம் திருப்பி கொடு‘‘ என்று கத்தியுள்ளார். பதிலுக்கு “நான் ஹேமந்தி தாசை கட்டாயப்படுத்தி என்னுடன் அழைத்து செல்லவில்லை. அவள் தான் என்னுடன் விரும்பி வந்தாள். நீ அவளை மறந்து விடுÕÕ என்று மணீஸ் குமார் கூறினார்.
இதனால், கோபத்தின் உச்சிக்கு சென்ற ஆதித்யா, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுட முயன்றார். துப்பாக்கியை எப்படி இயக்க வேண்டும் என்று தெரியாததால் அவரால் சுட முடியவில்லை. துப்பாக்கியை பார்த்ததும் ஹேமந்திதாசும், மணீஸ் குமாரும் பயத்தில் கூச்சலிட்டனர். இதைக்கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர்.
இதனால், செய்வதறியாது தவித்த ஆதித்யா துப்பாக்கியால் இருவரது தலையிலும் ஓங்கி அடித்தார். இதில் அவர்கள் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டது.
தப்ப முயன்ற ஆதித் யாவை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.
காயம் அடைந்த மணீஸ், ஹேமந்திதாஸ் இருவரையும் சிகிச்சைக்காக திருமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சுட முயன்றது ஏன்: மாணவன் வாக்குமூலம்
துப்பாக்கியால் சுட முயன்றது ஏன் என்று கைது செய்யப்பட்ட ஆதித்யா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:
ஹேமந்தி தாசை உயிருக்கு உயிராக காதலித்தேன். படிப்பு முடிந்த உடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்தோம். என் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில்தான் வில்லன் போல் மணீஸ் குமார் வந்தார். அவரை பழி வாங்க திட்டமிட்டேன். சில வாரங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு சென்றேன். அங்கு ஸீ 5 ஆயிரம் மதிப்பில் கள்ள துப்பாக்கி வாங்கி வந்தேன். ஓட்டல் அறைக்கு வந்த உடனேயே மணீஸ் குமாரை சுட்டு தள்ள முடிவு செய்தேன். சுட முயன்ற போது அதை எப்படி இயக்குவது என்று எனக்கு தெரியவில்லை.
பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு படிக்க வருபவர்களில் பலர் தங்களது பாதுகாப்பிற்காக கள்ளத்துப்பாக்கி வாங்கி வருவது வழக்கம்தான். இவ்வாறு ஆதித்யா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மீண்டும் தலைதூக்கும் துப்பாக்கி கலாசாரம்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரையில் கல்லூரி மாணவர்கள் துப்பாக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதே போன்று துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில ஆசாமிகள் 5 பேர் வேளச்சேரியில் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து துப்பாக்கியை வைத்து கடத்தல் செய்யும் சில சம்பவமும் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த துப்பாக்கி கலாசாரம் மீண்டும் தொடங்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதன், ஏப்ரல் 03, 2013
தாயுடன் மொபட்டில் சென்றபோது தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி இன்ஜினியரிங் மாணவி பலி

>சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங்களின் அவசர உதவிக்கு...
வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு போகும் போது விமான நிலையத்தில் பதட்டம் வேண்டாம்...
வெளிநாடுகளிலிருந்து சொந்த ஊருக்கு போகும் போது விமான நிலையத்தில் பதட்டம் வேண்டாம்...
1) முதலில் வெளிநாடு immigration கவுன்ட்டர் சென்றதும் அவர்கள் பாஸ்போர்ட்- ல் exit சீல் பதிந்துள்ளனரா என்பதை பார்க்கவும்.
2) இந்திய விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கும் முன்னரே எழுந்து ஓடவேண்டாம். சில சமயம் நம் அவசரத்தால் Hand Luggage மறக்க நேரிடும்.
3) நம் விமான நிலையத்தில் Immigration கவுன்ட்டர் களில் - நம் சில லகுட பாண்டிகள் நம்மை பார்த்ததும் எராளமான பார்வையும் - குதர்க்கமான கேள்விகளையும் கேட்பார்கள் பயப்ப வேண்டாம். மேலே சொன்னது போன்று இங்கேயும் Exit முத்திரை இருக்கிறதா என்று பார்க்கவும்.. என் சகோதருக்கு இது போன்று தான் முத்திரை குத்தாமல் அனுப்பிவிட்டனர்,
அவரோ குழந்தைகள் வெளியே காத்திருக்கின்றனர் என்று பப்பரக்கானு பார்க்காமல் போய்விட்டார்..... பிறகு என்ன திரும்ப சென்னை விமான நிலையம் வரும்போது நீ எப்படி வெளில போனேன்னு 3 மாதம் கழித்து கேட்கின்றனர்... அடப்பாவிகளா அத உங்க அப்ப்ரண்டிச்ட கேளுங்க ஆபீசர்ஸ்.. பிறகு என்ன தனி ரூமில் வைத்து enquery செய்து பழிய சீல் தேதியில் முத்திரை இட்டு குவைத் அனுப்பி வைத்தனர்... கவனமாக கையாள வேண்டும் சகோதர்களே...
4) எல்லாம் முடிந்ததும் பாஸ்போர்ட் டை - பத்திரபடுத்திவிட்டு உங்கள் Luggage எடுக்க செல்லவும்.
5) விமான நிலையம் உள்ளேயும் வெளியேயும் சில சில காக்கிகள் என்ன பாய் பொட்டில என்னனு கேப்பாங்க உண்மையை சொல்லி வெளியேறுங்கள்... மீறி பணம் கேட்டால் அருகில் உள்ள Aiport Authority ஆபீசரிடம் புகார் தெரிவியுங்கள்.
தகவல் : யாசீன் ஷாஜஹான்
ஓட்டுனரின் சாமர்த்தியம் - 60 பயணிகள் உயிர் தப்பினர்!
தேனி: தேனியிலிருந்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்ற தனியார் பஸ், ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் தீ விபத்திலிருந்து தப்பியது.
தேனியில் இருந்து மதுரைக்கு 60 பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் ஒன்று இன்று பகல் 12:15 மணிக்கு புறப்பட்டது. சிறிது நேரத்தில் பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை மூட்டமாக எதிரே சாலையே தெரியாத அளவிற்கு கிளம்பியது. இதை பார்த்ததும் ரோட்டில் சென்றவர்களும் எதிரில் வாகனங்களில் வந்தவர்களும் டிரைவரிடம் சைகை காட்டி பஸ்சை நிறுத்தக் கூறினர்.
இதனிடையே பஸ்ஸின் உள்ளேயும் புகை பரவி திடீரென தீ பிடிக்கத் தொடங்கியது. உடன் பஸ்ஸை நிறுத்திய ஓட்டுனர் அனைத்து பயணிகளையும் வெளியேறுமாறு கோரினார். பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பஸ்சை விட்டு கீழே இறங்கி ஓட்டம் பிடிக்க தொடங்கினர். இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படை வீரர்கள் பஸ்சில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.
ல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, 60 பயணிகளும் எந்தவித சேதமுமின்றி உயிர் தப்பினர்.
பிரவீன் தொகாடியாவை கைது செய்யவேண்டும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை !

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
